தன் சொந்த ரசிகர்களின் மத்தியில் எப்பொழுதும் தனிக்காட்டு சிங்கமாக வலம் வருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அவரை பார்க்க மிகுந்த ஆர்வமுடனும் ஆவலுடன் 1400 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர்.
இந்த நடைவழி பயணம் ஆனது ஹரியானாவின் ஜலான் கெடா என்கிற கிராமத்தில் துவங்கி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வந்து முடிந்துள்ளது. இந்த ரசிகருக்கு வயதோ 18. தோனியை நேரில் பார்க்க இப்படி வந்துள்ளார். இவர் நீண்டநாள் கனவாக இதை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறு வயது முதலே தோனியின் தீவிர ரசிகராம்.
இருந்தாலும் தோனியை பார்த்தே வேண்டுமென்று அவரது ஆவல்கல் இன்னுமே நிறைவேறாமல் உள்ளது. தோனி இப்போதுதான் ஐபிஎல் தொடரில் விளையாட ஐக்கிய அமீரகத்தில் முகாமித்துள்ளார். அவர் தன் சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்ப மூன்று மாத காலங்கள் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. அதுவரை பொறுத்திருந்து அவரை சந்தித்து விட்டு தான் ஊர் திரும்புவேன் என பிடிவாதம் பிடித்த அந்த பாசக்கார ரசிகருக்கு ராஞ்சி மக்கள் அனைவரும் ஆறுதல் சொல்லி ஊருக்கு திரும்ப விமான டிக்கெட்டை போட்டுக் கொடுத்துள்ளனர்.