தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிக சில நெருக்கமான உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது .
திருமணம் முடிந்தபிறகு நயன் – விக்கி இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். பின்னர் நயன்தாரா ஷாருக்கின் ஜவான் படத்தில் நடிக்க இருந்ததால் இருவரும் வேகமாக இந்தியா திரும்பி விட்டனர்.
நயன்தாரா ஜவான் ஷூட்டிங் சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விழா ஏற்பாடுகளை செய்தார். அதற்கு பிறகு இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த இரண்டாவது ஹனிமூனில் எடுக்கும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த இரண்டாம் ஹனிமூன் செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் விக்கி – நயன் இருவரும் ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன் சென்றுள்ளார்களாம்.