Friday, December 1, 2023

தலைவரை இதைவிட மாஸா காட்டனும்! தரமான செய்கை செய்ய காத்திருக்கும் இயக்குனர் அட்லீ!

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.

atlee 3 jpg

பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கிய ஜவான் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது.

இதனிடையே, அட்லீயின் அடுத்தப்படம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அட்லீ தனது சமீபத்திய பேட்டியில், ஷாருக்கான் – விஜய் காம்பினேஷனில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிசியாக உள்ளதால், கமல் – ஷாருக்கான் கூட்டணியில் படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரஜினிகாந்துடன் தான் இணைந்து படம் இயக்குவது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான சரியான நேரத்தில் அந்தப் படம் அமையும் என்றும் கூறியுள்ளார்.

atli rajini 3 jpg

அட்லீயின் அடுத்தப்படத்தில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles