Saturday, December 2, 2023

‘டான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டான்’. இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் கௌரவ தோற்றத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகி உள்ளது. ‘ஜலபுல ஜங்கு’ என்ற அந்த பாடல் இன்று வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles