Saturday, December 2, 2023

பூஜையுடன் துவங்கிய துல்கர் சல்மானின் அடுத்த படம்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…இந்த படம் ஒரு புதிய வகையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..இந்த படம் ரசிகர்களை கவரும் என சொல்லியுள்ளனர் படக்குழு.

dulquar salman 4

தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி..இவர் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார் இந்த படத்தை பற்றி சமீபத்தில் நிறைய பேசப்பட்டு இருந்தது,இப்படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

dulquar salman 2

இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன…இவர்கள் முன்பு வாத்தி படத்தை தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்த துல்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது…இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்…மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

dulquar salman 3

நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது இது காதல் வகை படமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles