இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், பும்ராவை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் கார்னர் செய்திருப்பதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.
2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 391 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்தியாவை விட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அஜின்க்யா ரஹானே, புஜாரா தடுப்பாட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இவர்கள் இருவர் மட்டுமே களத்தில் சுமார் 58 ஓவர்கள் களத்தில் நின்றனர். இங்கிலாந்து பவுலர்கள் சோர்வடைந்துவிட்டனர். அதன்பின்னர் இருவரும் ஆட்டமிழக்க இந்திய அணி சரிவை அடைந்ததால் 200 ரன்கன் முன்னிலை பெறுமா என்ற சந்தேகம் எழுந்தத.
இந்நிலையில், இஷாந்த் ஷர்மா அவுட்டான பிறகு களத்திற்குள் வந்த ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி மீண்டும் ஒரு தடுப்பாட்டத்தை முன்வைத்தனர். இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். இதில், ஆண்டர்சன் அடியும் வாங்கினார். அப்போது, ஆண்டர்சனுக்கும் பும்ராவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கிய போது, பும்ராவுக்கு மார்க் வுட், ராபின்சன் கூட்டணி கடுமையான பவுன்ஸ் பந்துகளை போட்டு அச்சுறுத்தியது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் தன் பங்குக்கு பும்ராவை வார்த்தைகளால் வம்பிழுத்துக் கொண்டிருந்தார். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த பும்ரா, பதிலுக்கு பதில் வார்த்தை மோதலில் ஈடுபட களம் ரொம்பவே சூடானது. பிறகு ஷமி வந்து பும்ராவை சமாதானம் செய்ய முயன்றார்.
ஆனால், அப்போதும் கோபம் தணியாத பும்ரா தொடர்ந்து கோபமாக பேசிக் கொண்டே இருந்தார். நிலைகுலைந்த பும்ரா அடுத்த ஓவரில், மார்க் வுட் மிக வேகமான பவுன்ஸ் பந்து ஒன்றை வீச, அந்த பும்ரா ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இதனால் ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார் பும்ரா. உடனடியாக இந்திய மருத்துவக் குழு வந்து பும்ராவை சோதித்தது. ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு எந்த அடியும் படவில்லை.
இரு அணி வீரர்களும் ரொம்பவே உக்கிரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு உள்ளது. இதில் இந்திய பவுலர்கள் பதிலடி கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.