Saturday, December 2, 2023

பிரபல தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் திடீர் மரணம் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல தொகுப்பாளராக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றிருந்த பிரபல நடிகரும், விஜே.,வுமான ஆனந்தக் கண்ணன் நேற்றிரவு மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சன் மியூஸிக் தொலைக்காட்சியில் ஆரம்ப கால தொகுப்பாளராக பணிபுரிந்து, மிகவும் பிரபலமான விஜே ஆனந்த கண்ணன், பின்னர் பல தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். சன் டி.வியில் வெளியான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்திருந்தார். சினிமாவில் நடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டிருந்ததால், சின்னத்திரைக்கும் இடைவெளி விட்டிருந்தார்.

இந்நிலையில், ஆனந்த கண்ணன் மரணம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டர் பக்கத்தில் அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார். கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணனின் திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles