Tuesday, December 5, 2023

தென்னாப்பிரிக்காவில் முதல் நாள் இந்தியன் 2 ஷூட்டிங்! வைரல் போட்டோ!

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.
kamal haasans first look indian 2இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ndian 2 OTT Rights 1

முந்தைய இந்தியன் 2 ஷூட்டிங் கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடைபெற்று வந்தது. தற்போது தைவான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

indian 2

தற்போது தென் ஆப்ரிக்காவில் 12 நாட்களுக்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 லுக்கில் கமல் ஹாசன், டிசைனர் அம்ரிதா ராம் உடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles