Wednesday, February 18, 2026

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’ உலகம் முழுவதும் மறு வெளியீடு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

2004ல் வெளியான ‘கில்லி’:

ADVERTISEMENT

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக 2004ல் வெளியான ‘கில்லி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது.

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் அவர்களுடைய திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

வித்யாசாகர் இசையமைத்த ‘அப்படிப் போடு’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

பழைய படங்களின் மறு வெளியீடு:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பழைய படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷ் நடித்த ‘3’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வரவேற்பை பெற்றன.

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’:

‘கில்லி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

இதற்கான புதிய ட்ரெய்லரும் இன்று வெளியாகிறது.

பல மாதங்களாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தின் ரீரிலீஸ் தேதி குறித்து கேட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு:

‘கில்லி’ படத்தின் ரீ ரிலீஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படம் அதே வரவேற்பை பெறுமா என்பதை பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT