Thursday, February 19, 2026

இந்த பாடலின் அட்ட காப்பியா கோட் முதல் சிங்கிள் ‘விசில் போடு’ பாடல் ! கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய்யின் குரல், மதன் கார்க்கியின் பாடல்கள் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் சிங்கிள் இறுதியாக வெளியிடப்பட்டது. ‘விசில் போடு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த லிரிக் வீடியோவில் பாடல் காட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சியில் விஜய் சக நடிகர்களான பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோருடன் கால்களை அசைப்பதைக் காட்டியது.

விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர்கள் நடிக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படமாகவும் கோட் திரைப்படம் அமைய இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கோட் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி முதலில் கோட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என ஒரு அப்டேட்டை ஒரு விழா மேடையில் கூறினார். அவர் சொன்னதை போலவே நேற்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை விசில் போட வைத்திருக்கிறது. மதன் கார்கி வரிகளில் விஜய் குரலில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அதிலும் விஜயுடன் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரும் சேர்ந்து பாடலில் ஆடியிருப்பது மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளத். மூன்று பேருமே 50வயதை நெருங்கியவர்கள். இருந்தாலும் அவர்கள் ஆட்டத்தில் எந்தவிதத்திலும் எனர்ஜி குறைந்த பாடில்லை. அடிப்படையிலேயே பிரசாந்த் நடனம் கற்றவர். விண்டேஜ் காலத்தில் பிரசாந்தின் நடனத்தை பார்த்து பார்த்து ரசித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்தை கோட் படத்தில் ஒரு புது வித எனர்ஜியில் பார்க்கும் போது பிரசாந்த் ரசிகர்களுக்கு ஏதோ புத்துணர்வாக இருக்கிறது. விஜயின் பாடலை பொருத்தவரை ஒரு சிங்கிள் வெளியாகிறது என்றால் அந்த பாடலை ரசிப்பதை விட இந்த பாடல் வேறெந்த பாடலின் சாயலில் இருக்கிறதா என்றுதான் ஆராய்வார்கள். அந்த வகையில் விசில் போடு பாடலும் ஒரு படத்தின் பாடலில் இருந்துதான் யுவன் காப்பி அடித்திருக்கிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.ஜவான் படத்தில் ‘இந்த இடம் என் காடு’ என்ற பாடலில் வரும் மியுஸிக் தான் விசில் போடு பாடலிலும் இருக்கிறது. அட்லீ , அனிருத் வரிசையில் இப்போது யுவனும் சேர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

வெங்கட் பிரபு எழுதி இயக்கிய GOAT திரைப்படத்தில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ், பிரேம்கி அமரன் மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளனர். GOAT செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.

தொழில்நுட்ப ரீதியாக, படத்தின் ஒளிப்பதிவு சித்தார்த் நுனி, படத்தொகுப்பு வெங்கட் ராஜன், கலை இயக்கம் ராஜீவன் மற்றும் ஸ்டண்ட் இயக்கம் திலீப் சுப்பராயன். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT