விஜய் நடிப்பில் லியோ படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 68-வது படம் ‘கோட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் மற்றும் ஏஐ கலைஞரான ஜே பிரிண்ட்ஸ் (ஜதுர்ஷன் பிரபாகரன்) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கோட்’ படத்தின் போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜூனில் தான் ‘கோட்’ படத்தின் போஸ்டரை தயாரித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் காண்பித்ததாகவும், தற்போது அதே போன்ற போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஜே பிரிண்ட்ஸ் பதிவிட்டுள்ளார்.
தனது படைப்பு திருடப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள ஜே பிரிண்ட்ஸ், இதுகுறித்து வெங்கட் பிரபுவின் விளக்கத்தை கேட்டுள்ளார்.
ஜே பிரிண்ட்ஸின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

