Tuesday, February 17, 2026

விஜய் நடித்த GOAT படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் நடிப்பில் உருவாகும் GOAT படம்: விமர்சனம், எதிர்பார்ப்பு, அரசியல் பிரச்சினைவிஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

GOAT படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது.

ADVERTISEMENT

GOAT படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

GOAT படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் எண்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

GOAT தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில், “தளபதி 69 படத்தை மணிரத்னம் இயக்கினால் நன்றாக இருக்கும். அந்தப் படத்தையும் நாங்களே தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்று எனக்கு தெரியும். அதனை நான் இப்போது சொல்லமாட்டேன்” என்றார்.

GOAT படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறுமா? விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT