Tuesday, February 24, 2026

‘கோட்’ படத்தில் அஜ்மல் கொடுத்த மாஸான அப்டேட்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கன்னியாகுமரி ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிகர் விஜயின் ஸ்குவாடில் முக்கியமான நபராக நடித்து வரும் அஜ்மல், கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், ‘கோட்’ படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவாவுடன் அஜ்மல்:

ADVERTISEMENT

40ஐ நெருங்கும் நடிகர் ஆனால், விஜய், பிரசாந்த், பிரபுதேவா என மூன்று 50 + நடிகர்களுடன் அஜ்மல் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடலில், கடைசியாக நடனமாட வர விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா அங்கிருந்து விலகி செல்லும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளன.

நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அஜ்மல் இந்தப் படத்தில் கருப்பு ஆடா? என்கிற கேள்விகளையும் தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அஜ்மலின் திரை வாழ்க்கை:

2007 ஆம் ஆண்டு வெளியான பிரணய காலம் எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் பிரசன்னா நடித்து வெளியான அஞ்சாதே படத்தில் நடித்து மிரட்டினார்.
திரு திரு துரு துரு, கோ, மாற்றான், வெற்றிசெல்வன், சித்திரம் பேசுதடி 2, நெற்றிக்கண், மங்கல வாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் அஞ்சாதே மற்றும் கோ படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தன.
பொதுவாகவே இவர் படங்களில் நெகட்டிவ் ஷேடு கலந்து தான் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கோட்’ படத்தில் அஜ்மலின் வேடம்:

மங்காத்தாவை விட மிரட்டும்: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் அஜித் மற்றும் அவரது டீம் தரமான சம்பவம் செய்திருக்கும். பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின் என அந்த டீமில் உள்ள அனைவருக்கும் பெரிய முக்கியத்துவத்தை வெங்கட் பிரபு கொடுத்திருப்பார். அதை விட சிறப்பாக கோட் படத்தில் தளபதி விஜய்யின் ஸ்குவாட் இருக்கும் என்றும் இதிலும், அந்த அளவுக்கு சம்பவத்தை வெங்கட் பிரபு செய்து இருக்கிறார் என அஜ்மல் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
கருப்பு ஆடு: படத்துக்கே கோட் என டைட்டில் வைத்துள்ள வெங்கட் பிரபு நிச்சயம் கருப்பு ஆடு ஒன்றை படத்தில் வைத்திருப்பார். அந்த கருப்பு ஆடே அஜ்மலாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விசில் போடு பாடலில் கூட இவர் ஆடும் போது மற்ற நடிகர்கள் கண்டுக்காமல் விட்டு அசிங்கப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT