Tuesday, February 24, 2026

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...

தமிழகத்தில் வெயில் தீவிரம்: செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது....
ADVERTISEMENT

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின் பல இடங்களில் கொழுப்பு படிந்து, குறிப்பாக தொப்பை, தொடை, இடுப்பு போன்ற பகுதிகளில் அது அடையாளம் காணக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிடுகிறது.

கொழுப்பைக் குறைக்க பொதுவாக உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால், எல்லோராலும் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாது. அதற்கு பதிலாக, இயற்கையான வழிகளில் கொழுப்பைக் குறைக்க முடியும்.

ADVERTISEMENT

அந்த வகையில், தொப்பை கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் நெல்லிக்காய் தேநீர் ஒரு சிறந்த வழி. நெல்லிக்காயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

நெல்லிக்காய் தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால், உடலில் உள்ள கொழுப்பு விரைவாக எரிக்கப்படுகிறது.

நெல்லிக்காய் தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

1 நெல்லிக்காய்
1 கிளாஸ் தண்ணீர்
சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி
சிட்டிகை மிளகு பொடி (விருப்பமானது)
அரை எலுமிச்சை பழச்சாறு (விருப்பமானது)
செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் தண்ணீரில் நெல்லிக்காய் துண்டுகள், இலவங்கப்பட்டை பொடி மற்றும் மிளகு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேநீர் நன்றாக கொதித்ததும் வடிகட்டி குடிக்கவும்.
சுவைக்காக அரை எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
எப்படி குடிப்பது?

இந்த நெல்லிக்காய் தேநீரை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் உணவு உட்கொண்ட பிறகு குடிக்கலாம்.
தினமும் இரண்டு முறை குடிப்பது நல்லது.
குறிப்பு:

நெல்லிக்காய் சூரணத்தை பயன்படுத்தியும் இந்த தேநீரை தயாரிக்கலாம்.
எந்த ஒரு புதிய உணவுப் பொருளை உட்கொள்ளும் முன்பும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT