Tuesday, February 24, 2026

காளிதாஸ், அர்ஜுன் தாஸ் நடித்த போர் படத்தின் புதிய போஸ்டர் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் தயாராகி வரும் “போர்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. ஒரு பக்கத்தில் அர்ஜுன் தாஸ், மற்றொரு பக்கத்தில் காளிதாஸ் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டர், வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிப்பதை குறிக்கிறது.

ADVERTISEMENT

இது குறித்து இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறுகையில், “இந்தப் படம், பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும் ஒரு வித்தியாசமான படம். இந்தப் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது” என்றார்.

பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜோய் நம்பியார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா மற்றும் கேட்வே பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை விநியோகம் செய்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT