ஐபிஎல் 2024 ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பர் கிளாசன், 140 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை சரியாக பிடித்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவானை ஸ்டம்ப் செய்த திறமை ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணி வெற்றிக்கு கேப்டன் கம்மின்ஸ் மற்றும் புவனேஷ்வர் குமார் முக்கிய பங்கு வகித்தனர். கம்மின்ஸ் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் பவர் பிளே ஓவர்களில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி பேட்டிங் தொடங்கியபோது முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த புவனேஷ்வர் குமாரை அட்டாக் செய்ய ஷிகர் தவான் முயன்றார். 2வது ஓவரில் பவுண்டரி விளாசிய தவான், 5வது ஓவரில் ஷிகர் தவான் இறங்கி வந்து 2 ரன்கள் சேர்க்க, உடனடியாக விக்கெட் கீப்பர் கிளாசன் ஸ்டம்பிற்கு அருகில் கொண்டு வரப்பட்டார்.
140 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை ஷிகர் தவான் அடிக்க முயற்சிக்க, அது கிளாசனின் கைகளில் பிடிபட்டது. பந்தை பிடித்த வேகத்தில் ஷிகர் தவானை ஸ்டம்ப் செய்து கிளாசன் வீழ்த்தினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளாசனின் இந்த திறமை ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக பதிவு செய்யப்படும்.
