தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதோடு சமூக பொறுப்புணர்வுடன் இருக்கும் கஸ்தூரி அரசியலில் இருக்கிறார். இதையொட்டி டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் விவாதங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
இப்படி டிவி சேனல்களில் முகம் தெரிந்தபடி இருக்கும் கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாகும் இருக்கும் புகைப்படத்தை போட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், புதிய தொடக்கம், இந்த செய்தி உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு ஹாஷ்டேக்கில் #mrPREGNANT” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஏப்ரல் 1 என்பதால் முட்டாள்கள் தின பதிவாக இருக்கலாம் என ஒரு சில கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நடிகை கஸ்தூரி, கர்ப்பிணி வேடத்தில் ஏதாவது திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கலாம் என்று கூறி வருகின்றனர் .உண்மையில் கஸ்தூரியின் டுவிட்டிற்கும் ஹேஷ்டேக்கிற்கும் என்ன அர்த்தம் என்பதை அவரே விரைவில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.