பளபளக்கும் உடம்பு… பார்த்தவுடன் உச்சு கொட்டவைக்கும் அழகு என ஒட்டுமொத்த அழகுக்கும் சொந்தக்காரியாக இருக்கும் நடிகை நிதி அகர்வால், காதல் தோல்வியை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கில் கலக்கிய நிதி:
முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிதி, சவ்ய சாச்சி படத்தின் மூலம் தெலுங்கில் பெயர் பெற்றார்.
தமிழில் ரோமியோ ஜூலியட், போகன், பூமி, ஈஸ்வரன், கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது.
காதல் பிரேக்கப்:
திறமை மற்றும் அழகு இரண்டையும் கொண்ட நிதி, ஒரு பிரபல நடிகரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சினிமாவில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் ஒப்புக்கு நடித்ததாகவும், விரைவில் திருமணம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் பற்றி சில விஷயங்கள் தெரியவந்ததால் காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம்… சினிமாவில் கவனம்:
காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்த நிதி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
