Tuesday, February 24, 2026

நயன்தாராவை விட ஆண்ட்ரியா தான் சிறந்த நடிகை? “மனுஷி” பட ட்ரெய்லர் விமர்சனம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அண்மைக் காலமாக நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் ஹீரோ இல்லாத கதைகள் தான் இவரது விருப்பமாக இருக்கிறது.

அப்படி வெளிவந்து இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் தான் “அறம்”. கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மிகப்பெரும் கவனம் பெற்றது.

ADVERTISEMENT

அதை தொடர்ந்து நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கினார். தற்போது அவரை ஓரம் கட்டும் அளவுக்கு ஆண்ட்ரியாவை வைத்து ஒரு தரமான படத்தை தயார் செய்திருக்கிறார் கோபி நயினார்.

இந்த கூட்டணியில் உருவாகி இருக்கும் “மனுஷி” படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. காவல்துறையின் விசாரணையில் சிக்கும் ஆண்ட்ரியா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு.

பல திருப்பங்கள் நிறைந்த அந்த ட்ரெய்லரில் வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் தெறித்தது. இன்றைய அரசியலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் பல காட்சிகள் அதில் இருந்தது.

அதை பார்க்கும் போதே படம் வெளியாகி சில சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தது. அதேசமயம் ஆண்ட்ரியாவுக்கும் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

“மனுஷி” படத்தின் ட்ரெய்லர் நயன்தாராவை விட ஆண்ட்ரியா சிறந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளதா?

படம் வெளியான பிறகு தான் அதற்கான பதில் கிடைக்கும்.

ஆனால், ட்ரெய்லரை பார்க்கும் போது, படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT