விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள் தொகுப்பாளர்கள்.
அந்த வகையில் பிரியங்கா விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும், அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பெரிய கூட்டமே உள்ளது.
இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வரும் பிரியங்கா விரைவில் ஆரம்பமாகவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிம் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை.
மேலும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மா.கா.பா-வுடன் சிவாங்கி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.