சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் STR 48. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், சிம்புவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படமாகும்.
இந்தப் படம் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், ஆனால் ரஜினி நடிக்க முடியாததால் சிம்பு இந்தக் கதைக்குள் வந்திருக்கிறார் என்றும் ஏற்கனவே அறிந்த விஷயம்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. அந்தப் படத்தை பார்த்துதான் ரஜினி தேசிங்குபெரியசாமியை அழைத்து நாமும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் தேசிங்கு பெரியசாமியை பற்றியும் STR 48 படத்தை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷன் ஏடியாக பணிபுரிந்தாராம். அப்போது இருந்தே தேசிங்கு பெரியசாமியுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டதாம்.
“STR 48 படம் பெரிய அளவில் வர இருக்கிறது. ராஜமவுலி பாகுபாலி என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து எப்படி இந்திய அளவில் பேசப்பட்ட இயக்குனராக மாறியிருக்கிறாரோ அதே போல்தான் இந்த STR 48 படமும். இந்த படம் வெளியாகி தேசிங்கு பெரியசாமி கண்டிப்பாக டாப் 5 இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெறுவார்” என்று ரக்ஷன் கூறினார்.
மேலும், STR 48 படத்தின் ஒன் லைன் கதை தனக்கு தெரியும் என்றும் அதுவே வேற லெவல் என்றும் கூறி, “STR 48 படத்தில் ஒரு வேளை நான் நடிக்கலாம் அல்லது ஏடியாகவாவது கண்டிப்பாக இருப்பேன்” என்றும் ரக்ஷன் கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. படம் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#STR48: DesinghPeriyasamy's version of Baahubali ⚔️🔥
– VJ Rakshan#SilambarasanTRpic.twitter.com/27kqYnLu3t— AmuthaBharathi (@CinemaWithAB) January 16, 2024
