Tuesday, February 24, 2026

இனி தமிழ்நாட்டில் ரியல் தளபதி னா அது ஜடேஜா தான் ! கோபத்தில் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தளபதி சிஎஸ்கே: ஜடேஜா தோனியின் சாதனையை சமன் செய்தார்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தற்போது நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

ADVERTISEMENT

கேகேஆர் அணிக்கு எதிராக களம் இறங்கிய முன்னாள் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை சிஎஸ்கே அணிக்காக ஆட்டநாயகன் விருது வாங்கிய தோனியின் சாதனையை ஜடேஜா சமன் செய்திருக்கிறார். தோனி 15 முறையும், ஜடேஜா தற்போது 15 முறையும் ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

தோனி – 15 முறை
ஜடேஜா – 15 முறை
சுரேஷ் ரெய்னா – 12 முறை
ருதுராஜ் – 10 முறை
மைக்கேல் ஹஸி – 10 முறை
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவின் ஆதிக்கம்:

இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியதன் மூலம் இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் 11 போட்டிகளில் கேகேஆர் எதிர்கொண்டு எட்டு முறை சிஎஸ்கே வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில், சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜடேஜா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலைய வைத்தார்.

ஜடேஜாவின் சேட்டை:

ரசிகர்களை எண்டர்டைன் செய்வதிலும் சேட்டை செய்வதிலும் ஜடேஜாவுக்கு நிகர் யாருமில்லை. நேற்று, கடைசியாக தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஜடேஜா தோனி போலவே பேட், ஹெல்மெட் அணிந்து மைதானத்தில் களமிறங்கினார். பின்னர், தோனிக்கு வழிவிட்டார். இதனை பார்த்து மைதானமே அதிர்ந்தது.

ஜடேஜாவுக்கு ‘தல’ பட்டம் வேண்டும்:

தோனிக்கு ‘தல’, ரெய்னாவுக்கு ‘சின்ன தல’ எனப் பெயர் வைத்திருப்பது போல் ஜடேஜாவிற்கு ரசிகர்கள் இன்னும் எந்தப் பட்டமும் வழங்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஹர்ஷா போக்லே, “தல, சின்ன தல என அவர்கள் இருவருக்கும் பட்டங்கள் உண்டு. அந்த வகையில் உங்களுக்கு ‘கிரிக்கெட் தளபதி’ என்று பட்டம் அளிக்கலாமா?” என்று கேட்டார்.

அதற்கு ஜடேஜா, “அவர்கள் இருவரின் பட்டங்களும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனால், எனக்கு அப்படியில்லை. அதனால் யாரிடமாவது சொல்லி ரசிகர்களிடம் சம்மதம் வாங்க வைக்கிறேன். அவர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்,” என்று சிரிப்புடன் கூறினார்.

சேப்பாக்கம் மைதானம் குறித்து ஜடேஜா:

“எப்போதுமே சென்னை மைதானத்தில் பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு வந்து விளையாடும் அணிக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள்தான் இடைவெளி இருக்கும். அந்த குறுகிய காலத்தில் ஆடுகளத்தை புரிந்துகொள்வது கடினம். ஆனால், இது எங்களுடைய சொந்த மைதானம் என்பதால், இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்,” என்று ஜடேஜா தெரிவித்தார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT