ஜவான் ரிலீசான உடன் எனக்கு ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது என இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில், உருவான ‘ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசை இருக்க அமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
#Atlee : HOLLYWOOD Film⭐#Atlee : ” After The #JAWAN Film Release i Got Call From HOLLYWOOD To Do A Film There🫣🔥 ”
KOLLYWOOD✅
BOLLYWOOD✅
TOLLYWOOD : AA Project😎
HOLLYWOOD⏳— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 24, 2023
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் அட்லி, ‘ஜவான்’ திரைப்படம் வெளியான நேரத்தில் எனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டில் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, அடுத்ததாக டோலிவுட் படம் இயக்க இருக்கும் அட்லிக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அட்லி, ஹாலிவுட் படத்தை எப்போது இயக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.