Tuesday, February 24, 2026

நடிகர் ரியோ நடித்த ஜோ படத்தின் ஓடிடி ரீலிஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் ரியோ நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான ஜோ திரைப்படம், தமிழ் சினிமாவில் சொல்லப்படாத காதல் கதையாக அமைந்து எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சியுடன் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஜோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜோ திரைப்படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். மேலும், பவ்யா திரிகா, அஜ்மல், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய கதைக்கருவை கொண்ட ஒரு முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT