பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பேட்டிஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் பாலிவுட் நடிகை ஹீனா கான் தமிழ் சினிமா நடிகைகள் குறிப்பாக தென்னிந்திய சினிமா நடிகைகள் அனைவரும் குண்டாக இருக்கிறார்கள் என்று கிண்டலாக தெரிவித்திருந்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.