சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோரின் AI மூலமாக Fake வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது…இது பெரிய அளவில் சர்ச்சையை தந்திருந்தது யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லலாம்…இதனை எதிர்த்து பல பிரபலங்கள் விமர்சனத்தை வைத்தனர் பலரும் இதனை கண்டித்து வந்தனர்…
ராஷ்மிகா மந்தனாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் இன்னும் பேசி இருந்தனர்…மேலும் இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில். மீடியாவில் என நிறைய விமர்சனங்கள் எழுந்தது…இப்படி பட்ட வீடியோ வெளியிட்டால் 3-ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் மார்பிங் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…இதனை யார் செய்தது என்பது தெரியவேண்டும் என சர்ச்சை எழுந்து வருகின்றது.
அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூமில் ஆடை மாற்றும் ஒரு இளம்பெண்ணின் முகத்தில் நடிகை கஜோலின் முகத்தை பொருத்தி எடிட் செய்து வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.இதனை இப்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர்…இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருகின்றனர்….விரைவில் அந்த குற்றவாளியை கண்டறிந்து அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…நிரோசயம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை இருக்கும் என்று சொல்லவும் படுகின்றது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்