Tuesday, February 24, 2026

ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜி.வி.பிரகாஷ் நடித்த கள்வன் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கள்வன்’ திரைப்படத்தின் இயக்குனர் PV ஷங்கர், கொங்கு வட்டார வழக்கு பேச்சுமொழிகளை பயன்படுத்தினாலே போதும், கொங்கு கலாச்சாரத்தை சொல்லி விடலாம் என்று நினைத்துவிட்டார் போல தெரிகிறது.

படத்தில் நடிக்கும் சிலர் மட்டுமே கொங்கு தமிழை சரியாக பேசுகிறார்கள். மற்றவர்கள் வெறும் பேச்சுவழக்கில் பேசுகிறார்கள்.

ADVERTISEMENT

கதை:

சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஹீரோவும் அவரது நண்பரும் சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். யானை தாக்கி இறப்பவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்குவதை அறிந்து, ஹீரோவும் நண்பரும் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.

அதன்படி, ஒரு வயதான முதியவரை (பாரதிராஜா) தத்து எடுத்து, அவரை யானை தாக்கி கொல்ல திட்டமிடுகின்றனர்.

நடிப்பு:

பாரதிராஜாவும் இவானாவும் தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

பாரதிராஜாவின் அனுபவம் மற்றும் இவானாவின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் எப்போதும் போல பொறுப்பில்லாத இளைஞன் வேடத்தில் நடித்துள்ளார்.

திரைக்கதை:

கதையின் கருத்து நன்றாக இருந்தாலும், திரைக்கதை சுமாராக உள்ளது.

திருப்பங்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்தில் போதுமான அளவு இல்லை.

தொழில்நுட்பம்:

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.திரைக்கதை நேர்த்தியாக இருந்திருந்தால், “கள்வன்” படம் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

தற்போதுள்ள நிலையில், இது ஒரு சுமாரான படம் என்றே சொல்ல வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT