கமல்ஹாசனின் விக்ரம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது, மேலும் 3.5 ஆண்டுகளுக்குப் பிறகு பழம்பெரும் நடிகர் கமல் மீண்டும் நடிகராக வருவதைக் குறிக்கும் வகையில் ரசிகர்கள் இந்தத் திட்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். விக்ரம் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஒப்பந்தம் செய்துள்ளதால் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஏழு விநாடிகள் மட்டுமே உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ’ஒன் ரோல், நோ லிமிட்ஸ்’ என்ற கேப்ஷனுடன் கமல்ஹாசனின் மாஸ் காட்சி உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ONE RULE. NO LIMITS. #VikramFromJune3 #Ulaganayagan #KamalHaasan #Vikram #Aarambikalangala@ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @RedGiantMovies_ @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @RKFI @turmericmediaTM @MShenbagamoort3 @SonyMusicSouth @APIfilms pic.twitter.com/DTa4ZHWINE
— Red Giant Movies (@RedGiantMovies_) April 1, 2022