Tuesday, February 24, 2026

சூர்யாவின் “கங்குவா” டப்பிங் பணிகள் 10 நாட்களில் முடிவு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “கங்குவா” படத்தின் டப்பிங் பணிகள் 10 நாட்களில் முடிவடையும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சர்வதேச அளவில் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஓடிடியில் 20 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படத்தின் சூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சூர்யா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது “கங்குவா” படம். அவரது அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்து வரும் சூழலில் இந்த படம் எப்படிப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டீசரில் முதலையின் கண் மிரட்டலாக காட்டப்பட்டிருந்தது குறித்து தனஞ்செயன் பேசியுள்ளார். இந்தக் காட்சி திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று சிவா நம்பிக்கை தெரிவித்ததாகவும் தனஞ்செயன் கூறியுள்ளார்.

“கங்குவா” படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளின் வெளியீட்டாளர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவுள்ளதாக தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT