Friday, December 1, 2023

குஷி படத்தின் அப்டேட்! சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா செய்த Romance படத்தை பார்க்க ரெடியா?

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு காதலர்கள் மத்தியில் செம வரவேற்பு இருந்தது.

தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்…வெளியான முதல் வாரத்தில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ஒரே வாரத்தில் ரூ.70 கோடி வசூலை குவித்தது…இதனால் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி வரவில்லை.

முதல் வாரம் ரூ.70 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் வாரத்தில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் தெலுங்கில் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் படம் ஓரளவு லாபத்தை எடுத்து தப்பித்தது.

தெலுங்கில் குஷி படம் நஷ்டத்தை சந்தித்தாலும் தமிழ் நாட்டில் இப்படம் நன்கு வசூலித்தது இப்படம் ரூ.10 கோடி வரை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து நன்கு லாபத்தை கொடுத்துள்ளது அதேபோல் இப்படத்தை வெளிநாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நன்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி குஷி படம் தமிழ்நாட்டை தவிர தியேட்டரில் சொதப்பியதால் இப்படத்தை அக்டோபர் 6-ந் தேதி ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது…ஆனால் அந்த ரிலீஸ் தேதி தற்போது திடீரென மாற்றப்பட்டு உள்ளது அதன்படி குஷி திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதியே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் தியேட்டரில் மிஸ் செய்தவர்களுக்கு விருந்து என சொல்லப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles