தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லட்சுமி மேனன், தனது முதல் காதல் தோல்வியின் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
ஒரு பேட்டியில் பேசிய லட்சுமி மேனன், “என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேராக போய் லவ் சொல்லிட்டேன்.
சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இதுபோல எதுவும் நடக்கவில்லை. அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார். நான் என்னுடைய படிப்பில் கவனமாக இருந்தேன். நண்பர்கள் போலவே இருந்தோம்.
எப்போதாவது ஒருமுறைதான் பேசிக் கொள்வோம். பள்ளி காலம் முடியும் தருவாயில் தான் அடிக்கடி பேச தொடங்கினோம். தொலைபேசியில் பேச தொடங்கினோம். போர்வையை போர்த்திக் கொண்டு அவருடன் நான் ரகசியமாக பேசுவேன். வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி சுற்றி வந்து தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.
ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போய்விட்டது. நான் என்னுடைய துறையில் பிஸியாகிவிட்டேன். அவர் அவருடைய துறையில் பிஸியாகிவிட்டார். அவர் திருமணமும் செய்துவிட்டார்.
அந்த காதல் தோல்வியை நான் இன்றும் மறக்கவில்லை. அந்த காதல் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. காதலை வெளிப்படுத்தும் போது, அது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். காதலில் ஏமாற்றம் அடையும் போது, அது எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்தேன்.
இந்த அனுபவங்கள் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தன. அதனால், நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரம் முடிவு செய்ய மாட்டேன். எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து, நன்கு யோசித்து முடிவு செய்வேன்.” என்று கூறியுள்ளார்.
லட்சுமி மேனனின் இந்த உரை, முதல் காதல் தோல்வியால் ஏமாற்றப்பட்ட அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.
