Tuesday, February 24, 2026

அயலான் 2 படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்குப் பெரும் பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில், அயலான் 2 படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அயலான் 1 திரைப்படத்திற்கு விஎஃப்எக்ஸ் செய்த பேன்தம் எஃப்எக்ஸ் குழுவே அயலான் 2 படத்திற்கும் விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பேன்தம் எஃப்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயலான் 2 படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் 200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். படத்தில் அமைக்கப்படும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அயலான் 1 படத்தில் அமைக்கப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைத்திருந்த நிலையில், அயலான் 2 படத்தில் அமைக்கப்படும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அயலான் 2 படம் 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT