தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசைக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அனிருத் தனது முதல் உலக இசைப் பயணத்தை துபாயில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். பிராண்ட் அவதார் மற்றும் பல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிப்ரவரி 10-ம் தேதி துபாயில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதில் அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் இடம்பெற இருக்கின்றன. குறிப்பாக, அஜித் நடித்த வலிமை, விஸ்வாசம், விவேகம், துணிவு, வில்லன் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இசையமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி அனிருத் கூறும்போது, “இந்த உலக இசைச் சுற்றுப் பயணத்தின் மூலம், சினிமாவில் நான் அறிமுகமானதில் இருந்து எனது இசையைப் பாராட்டிய பார்வையாளர்களுடன் எனது வெற்றியையும் இசைப் பயணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
அனிருத்தின் உலக இசைப் பயணம் துபாய் முதல் தொடங்கி, உலகின் பிற பகுதிகளிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
