லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் பான் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளது. படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என இணையத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், முதல் வாரத்தில் படம் ரூ 461 கோடியை வசூலித்து இருப்பதாக லலித்குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி OTT தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளதால், வரும் நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என தகவல் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ எந்த தகவலும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடவில்லை.