Saturday, December 2, 2023

லிங்குசாமி நடத்தவிருக்கும் போட்டிக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் மற்றும் 1 லட்சம் பரிசு!

மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ரூ 1.லட்சம் பரிசுத் தொகையுடன் கவிதை போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி.

தமிழ் கவிதை உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர், இலக்கிய உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது பற்றாளர், வாசகர்கள் தமிழகம் முழுவதும் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில், கவிக்கோ அப்துல் ரகுமான் மீது தீவிர பற்றுகொண்டவர் திரைப்பட இயக்குநர் லிக்குசாமி. இந்த நிலையில், ஹைக்கூ கவிதை போட்டி ஒன்றை ஆர்.சிவக்குமாருடன் இணைந்து அறிவித்துள்ளார்.

இப்போட்டியில் வயது வித்தியாசமின்றி எவரும் கலந்துகொள்ளலாம். மூன்று வரிகள் மட்டும் கொண்ட, இரண்டு ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும். கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் தீர்ப்பின்படி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது என அறிவித்துள்ளனர்.

kavikko abdul rahman

இது தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, என் வாழ்வில் இதனை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். கவிக்கோ அப்துல் ரகுமான் அய்யா மீது நான் கொண்ட பற்று மற்றும் ஹைக்கூ மீது நான் கொண்ட காதல் தான் இந்தப் போட்டியை நடத்த காரணம். நீங்கள் எல்லோரும் இதில் பங்கேற்பீர்கள் என்று நான் நம்புகிறேன், என தெரிவித்தார்.

கவிதைகள் kavikohaikupotti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். போட்டி முடிவுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles