Saturday, December 2, 2023

10 படங்கள் மட்டுமே இயக்குவேன்! இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது 10 படங்கள் மட்டுமே இயக்குவேன் என்ற முடிவை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் எப்போதும் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்தான். என்னை கொண்டு வந்து ஒரு பொசிஷனில் உட்காரவைத்திருக்கிறார்கள். அதை என்னால் ஹேண்டில் செய்ய முடியவில்லை. எனக்கு பிடித்ததை செய்து விட்டு போய்விடுவேன்” என்று கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

இந்தப் படத்திற்குப் பிறகு, கைதி 2, ரஜினிகாந்துடன் ஒரு படம் ஆகியவை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகின்றன. கைதி 2 படம் லோகேஷ் கனகராஜின் 7-வது படமாக இருக்கும்.

லோகேஷ் கனகராஜின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles