தளபதி விஜய் நடித்து வரும் ’Leo’ திரைப்படம் ஏற்கனவே ஒரு மல்டி ஸ்டார் படம் என்ற நிலையில் அவ்வப்போது மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை அடுத்து ’Leo’ படத்தின் விஜய் portion முடிந்துள்ளதாக சொல்லியுள்ளனர் படக்குழு..
இயக்குனர் லோகேஷ் தரமான சம்பவம் செய்ய உள்ளாராம்..தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், flop படம் கொடுக்காத இயக்குநர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் லோகேஷ் கனகராஜ்.
Leo படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், த்ரிஷா, பிரியாமணி, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் மட்டுமின்றி பான் – இந்திய படமாகவும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் ‘லியோ’ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் விஜய் நடிக்கும் காட்சிகள் முடிந்துள்ளதாக படக்குழு சொல்லி ஒரு ட்வீட் போட்டுள்ளது அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.