தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ₹600 வாங்கி வந்த நிலையில், தற்போது ₹950 வசூலிக்கின்றனர்.
விநியோகஸ்தர்கள் டெண்டரில் குறைவான கூலி குறிப்பு:
ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.
மூடிகள் மிஸ்சிங் என்ற பெயரில் பண வசூலி:
அதேபோல், சிலிண்டரின் மூடிகள் மிஸ்சிங் என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடமும் ₹3 ஆயிரம் வரை பிடித்தம் செய்கின்றனர்.
7 பிளாண்ட்களில் லாரி ஸ்டிரைக்:
இவ்வாறு தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளோம். இதனால் இந்த பிளாண்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் தட்டுப்பாடு:
இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஓரிரு நாளில் பாரத் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்:
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பாரத் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
