Tuesday, February 24, 2026

LoverFirstReview :இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான குட்நைட் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, மணிகண்டன் நடிப்பில் லவ்வர் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த திரைப்பத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்துள்ள விநியோகஸ்தர் ஒருவர், படத்தை பாராட்டி தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “லவ்வர் படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். படத்தில் அவ்வளவு அழகான காதல் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இன்றயை காலத்து இளைஞர்களை இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கிற்கு இழுக்கும். மணிகண்டனின் அசாதாரணமான நடிப்பு ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்க தூண்டுகிறது. சீன் ரோல்டன் ஆத்மார்த்தமான இசை. என்னுடைய வார்த்தைகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக லவ்வர் படம் பிளாக் பஸ்டர்” எனக் கூறியுள்ளார்.

இந்த விமர்சனம், மணிகண்டன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. லவ்வர் படம் மணிகண்டனின் அடுத்த வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை

லவ்வர் படத்தின் கதை, இளம் காதலர்களின் காதல் கதையாகும். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதே படத்தின் மையக்கரு.

படத்தின் இயக்குனர் பிரபுராம் வியாஸ், லவ்வர் படத்தை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கியுள்ளார். படத்தில் நடிகர் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் நடித்துள்ள காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன், படத்திற்கு அழகான இசையமைப்பை வழங்கியுள்ளார். படத்தின் டீசரிற்கான இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்த விநியோகஸ்தரின் பாசிட்டிவ் விமர்சனம், படத்தின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. லவ்வர் படம் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதால், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT