திரைப்படத்தில் மூத்த இயக்குனர் K.S சேதுமாதவன் காலமானார். அவருக்கு வயது 90. மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சேதுமாதவன். தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் சேதுமாதவன் தான். மலையாள திரையுலகில் முக்கிய இக்குநர்களில் ஒருவராகவும் அறியப்பட்டார்.
இவர் மலையாளம் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி, உட்பட்ட பிற மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது முதல் படம் மலையாளத்தில் 1961ஆம் ஆண்டு வெளியான ஞானசுந்தரி ஆகும். அதன்பிறகு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
இந்த நிலையில் இயக்குநர் சேதுராமன் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.