Saturday, December 2, 2023

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, எஸ். தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய திரைப்படம் #RT4GM !!

தெலுங்கு திரையுலகில் மாஸ் மஹாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது. திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும். இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் #RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

F0b8VNDaAAI43BP 1

கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டியைப் போலவே, உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவமான கதையை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒரு கிராமத்தில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையைக் காட்டுகிறது, அதில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது மற்றும் அபாய பலகை உள்ளது. தீப்பறக்கும் இந்த போஸ்டர் நம்முள் படம் குறித்து பெரும் ஆவலைத் தூண்டுகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி ஷங்கர் மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்தில் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் கைவண்ணத்தில், இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைக்கிறார்.

F0ko 7FXoAAlZOR

இதுவரை தோன்றாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி தேஜாவுக்கு இப்படம் அவரது திரை வாழ்வின் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இருக்கும்.

படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகர்கள்: ரவி தேஜா
தொழில்நுட்பக் குழு:
கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
இசை: எஸ்.தமன்
மக்கள் தொடர்பு : வம்சி சேகர், சதீஷ் குமார்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
பப்ளிசிட்டி : பாபா சாய்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles