Tuesday, February 24, 2026

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மீனாவின் திரைப்படம் – மீனாவுக்கு வாழ்த்து மழை!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை மீனா நடித்த “த்ரிஷ்யம்” திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து மீனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

த்ரிஷ்யம் படத்தின் வெற்றி:

ADVERTISEMENT

2013 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரைப்படம் “த்ரிஷ்யம்”.
வெறும் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.72 கோடி வரை வசூல் செய்து மலையாள திரையுலகையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பல்வேறு மொழிகளில் ரீமேக்:

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் சிங்களம், சீனா, இந்தோனேசியா மற்றும் கொரியன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
ஹாலிவுட் ரீமேக்:

தற்போது முதல் முறையாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ஹாலிவுட்டில் “த்ரிஷ்யம்” படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் இதன் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு:

இந்தியாவில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் ஹாலிவுட்டிலும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாவுக்கு வாழ்த்துக்கள்:

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படத்தில் நடித்த பெருமைக்கு மீனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT