Tuesday, February 24, 2026

ஒற்றைத் தலைவலி அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் கடுமையான தலைவலி. யாரோ ஒருவர் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் இருக்கும்.

சாதாரண சத்தம் கூட கேட்க முடியாது. தலைவலியுடன் சேர்த்து குமட்டல் போன்ற உணர்வு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதனை மைக்ரேன் தலைவலி என கூறுவர்.

ADVERTISEMENT

உலகில் உள்ள சுமார் 100 கோடி மக்கள் இந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

சைனஸ், சளி – இருமல், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், கண் வறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படலாம்.

பலர் காரணம் தெரியாமல் உடனடி நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது தவறானது.

தலைவலி தீர வலி நிவாரணிகளை உட்கொள்வதன் மூலம் தற்காலிக நிவாரணம் பெறலாம். ஆனால், இதன் பக்கவிளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே ஒற்றைத் தலைவலி வலியின் போது, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தவறுதலாக கூட வலி நிவாரணிகளை எடுக்கக்கூடாது.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்:

தலையில் தாங்க முடியாத வலி
சத்தம் கேட்க முடியாத நிலை
ஒளியை பார்க்க முடியாத நிலை
வாந்தி, குமட்டல்
மயக்கம்
சோர்வு
கண் எரிச்சல்
தலைவலியைத் தவிர்ப்பதற்கான வழிகள்:

வாயு பிரச்சனை ஏற்பட அனுமதிக்காதீர்கள்:
தலைவலிக்கும் குடல் ஆரோக்கியத்திற்க்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள் பெரும்பாலும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் இருக்கும். மேலும் அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், இரைப்பை குடல் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொண்டால் ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.

அனுலோம்-விலோம் பிராணாயாமம்:
ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைப் போக்க அனுலோம்-விலோம் பிராணாயாமம் மிகவும் பயனுள்ள யோகாசனம். இதனால் தலைவலி மட்டுமின்றி மன அழுத்தமும் நீங்கும். இந்த ஆசனத்தை தினமும் சுமார் 15 நிமிடங்கள் செய்து வந்தால், பல நன்மைகளைப் பெறலாம்.

தலைவலியை தவிர்க்க உணவில் சேர்க்க வேண்டியவை:
முளை கட்டிய தானிய உணவுகள்:

ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட, முளை கட்டிய தானிய உணவுகளை அதிகம் சாப்பிடத் தொடங்குங்கள். முளை கட்டுவதால், ஊட்டசத்து மதிப்பு இரட்டிப்பாகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT