Tuesday, February 24, 2026

எலிகளை விரட்ட !காய்ச்சல் மாத்திரை & கோதுமை மாவு கலவை!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

வீட்டில் எலி தொல்லை தீர்க்க எளிய வழி!

மண் வீடு, ஓட்டு வீடுகளில் எலி நடமாட்டம் அதிகம் இருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை கடித்து சேதப்படுத்துவதோடு, நோய்களை பரப்பவும் எலிகள் காரணமாகின்றன.

ADVERTISEMENT

ஒருமுறை எலிகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால், சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், எலிகளை எளிதில் விரட்டி விடலாம்.

தேவையான பொருட்கள்:

காய்ச்சல் மாத்திரை – 1 அல்லது 2
கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
செய்முறை:

காய்ச்சல் மாத்திரைகளை உரலில் இடித்து பொடியாக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவை கொட்டி, அதில் இடித்த காய்ச்சல் மாத்திரை தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எலிகள் நடமாடும் இடங்களில் வைக்கவும்.
எலிகள் இந்த உருண்டைகளை சாப்பிட்டால், அவை இறந்து விடும்.
மற்றொரு தீர்வு:

நாப்தலின் உருண்டை ஒன்றை எடுத்து, அதை ஒரு காகிதத்தில் வைத்து இடித்து பொடியாக்கவும்.
ஒரு ஸ்பூன் கடலை மாவில் நாப்தலின் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை எலி நடமாட்டம் உள்ள இடங்களில் தூவி விடவும்.
நாப்தலின் வாசனைக்கு எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.
குறிப்பு:

எலி மருந்துகளை வைக்கும்போது, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் அவற்றை உண்ணாமல் பார்த்துக் கொள்ளவும்.
எலி தொல்லை அதிகமாக இருந்தால், தீவிர நடவடிக்கை எடுக்க பூச்சிக்கொல்லி நிபுணர்களை அழைக்கவும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் வீட்டில் இருந்து எலிகளை எளிதில் விரட்டி விடலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT