பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்தவரை தலையில் அடித்ததாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
Slap-Kalesh b/w Nana patekar and his fan over that guy wanted to take sfie with Nana without his permission in Varanasi pic.twitter.com/ZBtIRolnUj
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 15, 2023
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நான் நடிக்கும் படத்தில் வரும் ஒரு காட்சியின் ரிகர்செல் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு இளைஞர் உள்ளே வந்துவிட்டார். அவர் படக்குழுவைச் சேர்ந்தவர் என்று நினைத்து, சம்பந்தப்பட்ட காட்சியின்படியே நான் அவரை அடித்து அனுப்பினேன்.
ஒத்திகை முடிந்த பின்தான், அவர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவர் இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது. உடனே நான், அவரை அழைக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. இது தவறுதலாக நடந்த விஷயம். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவின் உண்மையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நானா படேகர் மற்றும் படத்தின் இயக்குநர் அனில் ஷர்மா ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.