நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 26ஆம் தேதி மும்பையில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இம்முறை 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் என்பதால் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு புதிய முறையில் இந்த சீசன் நடைபெறவுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் கடந்த ஆண்டு ஃபிட்னஸ் பிரச்சனையால் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது..
இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி கம்பேக் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் தான் நம்ப யார்க்கர் கிங் டி.நடராஜன்.
இந்திய அணியில் யார்கர் பந்துகள் மூலம் அசத்தி வந்த நடராஜன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் நடராஜன் எப்போது கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு காத்திருந்தனர்.
When he isn't crushing your toes, he's breaking the stumps down! 🔥@Natarajan_91 #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/6bpkrG3ilZ
— SunRisers Hyderabad (@SunRisers) March 20, 2022
ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஐதராபாத் அணி நடராஜன் மீது அதிக நம்பிக்கை வைத்து மீண்டும் அவரை இந்த சீசனில் தனவசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் அணியின் நம்பிக்கையை பறைசாற்றும் வகையில், நடராஜன் அனல் பறக்கும் பவுலிங் பயிற்சி செய்யும் விடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் வெறிகொண்டு பந்துவீசும் நடராஜன், ஸ்டம்பை இரண்டாக உடைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் ஒரு தரமான சம்பவம் கண்டிப்பா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.