நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு நயன்தாரா சென்றதும் ரசிகர்கள் பலரும் அங்கு திரண்டு விட்டனர். இதனால் நயன்தாராவால் நிம்மதியாக சாமியை தரிசனம் செய்ய முடியாமல் கூட போனது.
அம்மன் ஆலயத்தில் வழிபாட்டை முடித்த கையோடு, ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் நயன்தாராவை காணவேண்டும் என ரசிகர்களுடன் தாய்மார்கள் பலரும் காத்திருந்தனர்.
பின் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா தோளில், ரசிகை ஒருவர் கை வைத்ததால் நயன்தாரா கோபமடைந்தார்.
இதன்பின் ரயில் நிலையத்திற்கு சென்ற நயன்தாரா, ரயிலில் எறியபின் அங்கு இருந்து ரசிகர் ஒருவர் நயன்தாராவை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது கடுப்பான நயன்தாரா, போட்டோ அடுத்தவரை பார்த்து ‘செல்போனை உடைத்துவிடுவேன்’ என கூறினார்.இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது…