Tuesday, February 24, 2026

சினிமாவில் புதிய சாதனை படத்தை நயன்தாரா ! குவியும் வாழ்த்துக்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நயன்தாரா, அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர், அதன் பின்னர் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.

மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்தில் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி ரிலீஸானது. இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா தனது 20 ஆண்டு கால சினிமா பயணத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார். அவரது சிறந்த நடிப்புக்கும், அழகுக்குமான ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. அவரது வளர்ச்சிக்கு அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய பங்கு வகித்துள்ளது.

நயன்தாரா சினிமாவில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்!

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT