தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1140 கோடி வசூலித்தது.
திருமணம் மற்றும் குழந்தைகள்:
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022 ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று பெற்றோர்களாகவும் உள்ளனர்.
குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமான பெயர்கள் சூட்டியுள்ளனர்.
காதலின் தொடக்கம்:
ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த விக்னேஷ் சிவன், “தனுஷ் தான் நானும் ரௌடிதான் கதையை நயனிடம் சொல்ல சொன்னார். நயன்தாராவுக்கும் அது பிடித்திருந்தது. நயன் படத்தில் வந்ததால்தான் முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற விரும்பாத விஜய் சேதுபதியும் நடிக்க சரி என்றார். இந்தப் படத்தின் மூலமாகத்தான் நாங்கள் பழக ஆரம்பித்தோம். ஒரு வருடத்தில் நாங்க நெருக்கமாகிவிட்டோம்” என்றார்.
நடிகை நயன்தாரா, “இது எங்களுக்கு மிகவும் இயற்கையாக நடந்தது. நாங்கள் அப்படியே வாழ்க்கையின் ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த்தோம். 3 மாதங்கள் ஆன பிறகுதான் புரிந்தது எங்களுக்குள் இது இருக்கிறதென” என்றார்.
தொடக்கம்:
2015-ல் “நானும் ரௌடிதான்” திரைப்படம் வெளியானது.
2014-ல் வெளியான “வேலையில்லா பட்டதாரி” படத்தில் விக்னேஷ் சிவன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தனுஷ் பங்களிப்பு:
“நானும் ரௌடிதான்” படத்தில் நயன்தாரா நடிக்க காரணமாக இருந்தது தனுஷ் தான்.
இது தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதலுக்கு அடித்தளம் அமைத்தது.
