Tuesday, February 24, 2026

நேற்று இந்த நேரம் படத்தின் திரைவிமர்சனம் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கல்லூரி நண்பர்கள் 7 பேர் ஊட்டிக்கு சுற்றுலா – ஒரு மர்மக் கொலை!
கதை:

நிகில், ரித்திகா உட்பட 7 கல்லூரி நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். நிகில் திடீரென காணாமல் போகிறார். தேடியும் கிடைக்காத நிலையில், வேல்ராஜ் என்ற காவல் அதிகாரி விசாரணை நடத்துகிறார். 6 நண்பர்களிடம் நடத்தும் விசாரணையின் மூலம் நிகிலுக்கு என்ன நடந்தது என்பதை அவர் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை.

ADVERTISEMENT

படத்தின் ப்ளஸ்:

திரைக்கதையின் முதல் பாதி, 7 நண்பர்களின் வாழ்க்கையை படிப்படியாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இரண்டாம் பாதியில் வரும் திடுக்கிடல்கள், திருப்பங்கள், எதிர்பாராத கிளைமாக்ஸ் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.
குற்றம் செய்தவரின் நியாயம், குற்றம் செய்ய தூண்டியவரின் குணாதிசயங்கள் தர்க்க ரீதியாக விளக்கப்படுகிறது.
படத்தின் மைனஸ்:

காணாமல் போன நண்பனை தேட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
சுற்றுலா வந்த நண்பர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்படவில்லை.
பாடல்கள் பின்னணி இசையில் ஈர்ப்பு இல்லை.
நடிப்பு:

ஷாரிக், ஹரிதா (ரித்திகா) கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
திவாகர் குமார் (ரோகித்), ஆனந்த் (வேல்ராஜ்) ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்பம்:

ஒளிப்பதிவாளர் விஷால், ஊட்டி இடங்களை அழகாக படம்பிடித்துள்ளார்.
மொத்தத்தில்:

புதிய நடிகர்களைக் கொண்டே, சுவாரஸ்யமான ‘மர்மக் கொலை’ திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று.

மதிப்பீடு: 3.5/5

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT